குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியாகியுள்ள பாட்டல் ராதா கூடுதல் திரைகளில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பாட்டல் ராதா.
மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியானது.
நல்ல வரவேற்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கூடுதல் திரைகளில் வெளியாகியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியது பேசுபொருளானது.
இந்தப் படத்துடன் வெளியான குடும்பஸ்தன் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிகர் மணிகண்டன் பாட்டல் ராதா திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டதாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
The impact is real! Increased shows for #BottleRadha across Tamil Nadu, fueled by strong word of mouth ð
— Neelam Productions (@officialneelam) January 25, 2025
Perfect family entertainer for your weekend.#BottleRadhaRunningSuccessfully ð« https://t.co/quqKrRtMuP @beemji @balloonpicturez #ArunBalaji @generous_tweet⦠pic.twitter.com/M2gjK12GSl
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 37 லட்சத்தில் எல்இடி திரைகள் திறப்பு

3,000 திரைகளில் வெளியாகும் ஜன நாயகன்!

1000 திரைகளுக்கு மேல் வெளியாகும் ஜன நாயகன்?

700-க்கும் மேற்பட்ட திரைகளில் கட்டா குஸ்தி - 2!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



