தி சப்ஸ்டன்ஸ் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்குமா?

ஆஸ்கர் சிறந்த படத்திற்கான பட்டியல் குறித்து...
தி சப்ஸ்டன்ஸ் படத்துக்கு ஆஸ்கர் கிடைக்குமா?
Updated on
1 min read

சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் பட்டியல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் இயக்குநர் கோரலி ஃபெர்கேட் (coralie fergeat) இயக்கத்தில் நடிகை டெமி மூர் (demi moore) நடிப்பில் உருவான தி சப்ஸ்டன்ஸ் (the substance) திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

கதைப்படி, பிரபல நிறுவனம் ஒன்று 50 வயது நாயகிக்கு அவரின் முதுமை தோற்றத்தைப் போக்கி இளம் தோற்றத்திற்கு திரும்பும் ரசாயனம் ஒன்றை தருகிறது. இதை தன் உடலில் செலுத்தும் நாயகிக்கு ஏற்படும் மாற்றங்களை ஹாரர் திரில்லர் வகையில் படமாக எடுத்திருந்தனர்.

ஓடிடியில் இப்படம் வெளியானதும் மிகப்பெரிதாக உலகளவில் கவனிக்கப்பட்டது. பலரும் 2024-ன் சிறந்த படங்களில் ஒன்று, இப்படியான கதையை ஒரு பெண் இயக்குநர் யோசித்ததை நம்ப முடியவில்லை என்றே குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்தாண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த திரைப்படங்கள் பிரிவில் அனோரா (Anora), தி புரூட்டலிஸ்ட் (the brutualist), எ கம்ப்ளீட் அன்நோன் (A complete unknown), கான்கிளேவ் (Conclave), டுன் -2 (Dune - 2), ஐ ஆம் ஸ்டில் ஹியர் (Iam still here), நிக்கல் பாய்ஸ் (Nickel boys), விக்டு (wicked), எமிலியா ஃபெரெஸ் (emilia ferez) ஆகியவற்றுடன் தி சப்ஸ்டன்ஸ் (the substance) திரைப்படமும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இப்பிரிவில் சப்ஸ்டன்ஸ் மற்றும் எமிலியா ஃபெரெஸ் ஆகிய படங்களுக்கே ஆஸ்கர் விருதை வெல்வதற்கான வாய்ப்புகள் மிகுந்திருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். நாயகி தெமி மூர் சிறந்த நடிகைக்கான பிரிவிலும் போட்டியில் உள்ளார்.

மேலும், பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய எமிலியா பெரெஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com