சர்ச்சை பேச்சு... மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!

இயக்குநர் மிஷ்கின் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்...
சர்ச்சை பேச்சு... மன்னிப்பு கேட்ட மிஷ்கின்!
Published on
Updated on
1 min read

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பலர் பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாகக் கூறி தன் பேச்சை துவங்கினார்.

பேச்சின் இடையே, பலமுறை தகாத வார்த்தைகளையும் பிறரைக் காயப்படுத்தும் தொனியிலும் பேசியது சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் வெற்றி மாறன், லிங்குசாமி உள்ளிட்டவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்தது அவர்களின் முகத்தில் தெரிந்தது.

மிஷ்கினின் இப்பேச்சு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். முக்கியமாக, நடிகர் அருள்தாஸ், “மேடையில் எப்படி பேச வேண்டும் என மிஷ்கின் தெரிந்துகொள்ள வேண்டும். பல புத்தகங்களைப் படித்து உலக சினிமாக்களை பார்த்தால் மட்டும் போதாது. நாகரீகம் தெரிய வேண்டும். இளையராஜா, பாலா போன்ற வயதில் மூத்த சாதனையாளர்களை அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார். முதலில் நீ யார்? பெரிய அறிவாளியா?” எனக் கடுமையாக தன் கண்டனங்களைப் பதிவு செய்தார்.

இந்த நிலையில், பேட் கேர்ள் டீசர் நிகழ்வில் பேசிய மிஷ்கின், “என்னுடைய பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நான் பெரிதும் மதிக்கும் கவிஞர் தாமரை வெற்றி கொடுத்த மிதப்பில் நான் அப்படி பேசியதாக் கூறியிருந்தார். சினிமாவில் 18 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். அதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். கவிஞர் தாமரை, இயக்குநர் லெனின், நடிகர் அருள்தாஸ், லஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் தாணு என பலரிடமும் அப்பேச்சிற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

நான் நகைச்சுவைக்காக மட்டும் அன்று அப்படி பேசினேன். இருட்டு அறையில் முரட்டு குத்து என பெயரிட்ட ஒரு படத்திற்கு ஏன் இப்படி பெயர் வைத்தீர்கள் எனக் கேட்டோமா? சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலரின் இறுதியில் ஒரு கெட்ட வார்த்தை இருந்தது. அதைக் கேட்டோமா? பிறகு, நான் பேசியது ஆபாசமாக இருக்கிறது என கடந்த 3 நாள்களாக ஏகப்பட்ட அழைப்புகள். மன்னிப்புக் கேட்க என்றுமே நான் தயங்கமாட்டேன். உதிரிப்பூக்கள் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு கதாபாத்திரம் ஊர்காரர்களைப் பார்த்து உங்களையெல்லாம் நான் கெட்டவனாக மாற்றிவிட்டேன் என்பார். நண்பர்களே, உங்களையெல்லாம் கடவுளாக நினைத்து எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com