
நடிகர் சிவகார்த்திகேயனின் 25ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார்.
அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தன் 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் தன் 25-வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
ஆகாஷ் பாஷ்கரன் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.
இப்படத்திற்கு ‘பராசக்தி’ எனப் பெயரிட்டுள்ளதாகவும் 1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதன் படத்தலைப்பு அறிவிப்பு டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.