பெரு: ஒரு மணி நேரத்துக்கு மேயரான பிரபல அமெரிக்க யூடியூபர்..!

பிரபல யூடியூபர் ஸ்பீட் பெரு நாட்டின் முக்கிய நகரத்தில் ஒரு மணி நேரம் மேயராக பதவியேற்றது வைரலாகி வருகிறது.
பெருவில் ஒரு மணி நேரம் மேயரான பிரபல யூடியூபர்
பெருவில் ஒரு மணி நேரம் மேயரான பிரபல யூடியூபர்படங்கள்: யூடியூப் /ஐஷோஸ்பீட்
Published on
Updated on
1 min read

பிரபல அமெரிக்க யூடியூபர் ஐஷோஸ்பீட் பெரு நாட்டில் ஒரு மணி நேரம் மேயராக பதவியேற்றது வைரலாகி வருகிறது.

டாரன் ஜேசன் வாட்கின்ஸ் ஜூனியர் எனப்படும் 20 வயதான அமெரிக்க யூடியூபர் ஸ்பீட் என அழைக்கப்படுகிறார்.

யூடியூப்பில் விடியோக்கள் வெளியிட்டு பிரபலமான இவர் கால்பந்து பிரபலம் ரொனால்டோவை சந்தித்து கூடுதல் பிரபலமானார். ஆனால், அவர் மெஸ்ஸி ரசிகர் எனக் கூறப்படுகிறது.

நேற்று தனது யூடியூப்பில் பக்கத்தில் பெரு நாட்டில் லிமா நகரத்திற்கு சென்றிருந்தார். அங்கு தன்னை கௌரவிக்க ஒரு மணி நேரம் மேயராக நியமித்ததை அறிவித்தார். சுமார் 4 மணி நேரம் நேரலையில் விடியோவை பதிவிட்டுள்ளார்.

பெருவின் அரசாங்க கட்டடிடத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. வெளியே அவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இவர் பதிவிட்ட பெரு விடியோ 24 மணி நேரத்தில் 7.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது.

ஸ்பீட் தற்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் இவரது பிறந்தநாளுக்கு ரொனால்டோ கேக் பரிசளித்திருந்தார். அவரது பதிவில் ரொனால்டோ கமெண்டுக்கு லட்சக்கணக்கில் லைக் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com