சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த அனுஜா குறும்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
97-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 2 ஆம் தேதி துவங்குகிறது. இதில், சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், நடிகை என பல பிரிவுகளில் பிரபல திரைப்படங்களும் நடிகர்களும் விருதிற்கான இறுதிப்பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதில், லைவ் ஆக்சன் குறும்படம் பிரிவில் இந்தியாவில் உருவான அனுஜா (anuja) குறும்படம் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இதையும் படிக்க: சினேகன் - கன்னிகா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்!
ஆடம் ஜே. கிரேவ்ஸ் இயக்கியுள்ள இக்குறும்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படம் வருகிற பிப். 5 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.