விமான நிலையத்தில் பிக் பாஸ் காதலர்களை சந்தித்த ஃபரீனா!

பிக் பாஸ் காதலர்களான செளந்தர்யா நஞ்சுண்டான், விஷ்ணு விஜய் உடன் நடிகை ஃபரீனா...
செளந்தர்யா - விஷ்ணு விஜய் உடன் ஃபரீனா
செளந்தர்யா - விஷ்ணு விஜய் உடன் ஃபரீனாபடம் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் காதலர்களான செளந்தர்யா நஞ்சுண்டான், விஷ்ணு விஜய் ஆகியோரை நடிகை ஃபரீனா சந்தித்துப் பேசியுள்ளார். விமான நிலையத்தில் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் விருந்தினராக வந்த காதலனிடம் காதலை வெளிப்படுத்தி தனது வாழ்க்கை துணையை உறுதி செய்ததன் மூலம் செளந்தர்யா பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல காதல்கள் மலர்ந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே தான் காதலித்து வந்த நடிகர் விஷ்ணு விஜய்யிடம், நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றிருக்கும்போது காதலை வெளிப்படுத்தி பலரையும் செளந்தர்யா கவர்ந்தார்.

இதனால், செளந்தர்யா - விஷ்ணு விஜய் ஜோடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தனர். எங்கு சென்றாலும் அவர்களிடம் திரைப் பிரபலங்கள் என்பதையும் தாண்டி பலர் பேசிவிட்டுச் செல்கின்றனர்.

செளந்தர்யா உடன் விஷ்ணு விஜய்
செளந்தர்யா உடன் விஷ்ணு விஜய்இன்ஸ்டாகிராம்

முன்பு நண்பர்களாக இருந்த இவர்கள், தற்போது காதலர்களாக அதிகாரப்பூர்வமாக இணைந்த பிறகு பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாகவே பங்கேற்று வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோது செளந்தர்யா - விஷ்ணு விஜய் ஜோடியை நடிகை ஃபரீனா ஆசாத் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள் அமெரிக்காவுக்குச் செல்ல இருந்த நிலையில் அவர்களுடன் உரையாடிவிட்டு கத்தார் புறப்பட்டதாக ஃபரீனா பகிர்ந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இருந்து நடிகை ஃபரீனா விலகிய நிலையில், தற்போது கத்தார் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சீரியலுக்காக கட்டடத் தொழிலாளியாக மாறிய நடிகை!

Summary

Actress Farina has met and spoken to Bigg Boss lovers Soundarya Nanjundan and Vishnu Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com