தமிழ் சீரியலின் மறுஉருவாக்கமா? புதிய தொடர் ஆட்டோ விஜயசாந்தி!

தெலுங்கு மொழியில் ஆட்டோ விஜயசாந்தி என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
தமிழ் சீரியலின் மறுஉருவாக்கமா? புதிய தொடர் ஆட்டோ விஜயசாந்தி!
Published on
Updated on
2 min read

தெலுங்கு மொழியில் ஆட்டோ விஜயசாந்தி என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் நாயகி ஆட்டோ ஓட்டுவதால், தமிழில் ஒளிபரப்பாகிவரும் வீரா, வினோதினி மற்றும் தனம் தொடரில் ஏதேனுமொரு தொடரின் மறு உருவாக்கமா? என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சின்ன திரையில் மாமியார் - மருமகள் பிரச்னைகளை மையப்படுத்தி தொடர்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கால மாற்றத்துக்கேற்ப பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி கதைகளை அமைத்து தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வீரா தொடரில், நாயகி ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். தற்போது திருமணத்துக்குப் பிறகும் ஆட்டோ ஓட்டி கணவருக்கு உதவியாக இருக்கிறார். இதில், வைஷ்ணவி நாயகியாக நடிக்கிறார்.

வீரா தொடரில்...
வீரா தொடரில்...

இதேபோன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தனம் தொடரில் சத்யா தேவராஜன் நாயகியாக நடித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுபவரை திருமணம் செய்துகொள்ளும் நிலையில், அவர் இறந்துவிட்ட பிறகு கணவரின் ஆட்டோவை ஓட்டி, கணவரின் குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார். அதில் அவர் சந்திக்கும் சவால்களே தனம் தொடரின் கதைக்களம்.

தனம் தொடரில்...
தனம் தொடரில்...

மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மற்றொரு தொடரான வினோதினி தொடரிலும் நாயகி ஆட்டோ ஓட்டுகிறார். இத்தொடரில் நடிகை ஆர்த்திகா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது தெலுங்கு மொழியில் ஆட்டோ விஜயசாந்தி என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் வர்ஷினி சுரேஷ் நாயகியாகவும், சிரஞ்சீவி நாயகனாகவும் நடிக்கிறார். இது தொடர்பான முன்னோட்ட விடியோ சமீபத்தில் வெளியானது.

இத்தொடரில் நாயகி ஆட்டோ ஓட்டுவதால், தமிழ் தொடரின் மறு உருவாக்கமா? என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | சமையல் நிகழ்ச்சியில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை!

Summary

A new series titled Auto Vijayashanti will be aired in Telugu is that remake of tamil serial?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com