வினோதினி தொடரில் நாயகனின் மனைவியாக புதிய நடிகை!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வினோதினி தொடரில் நாயகனின் மனைவியாக நடிகை சல்மா ஒப்பந்தமாகியுள்ளார்.
சல்மா
சல்மாபடம் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வினோதினி தொடரில் நாயகனின் மனைவியாக நடிகை சல்மா ஒப்பந்தமாகியுள்ளார்.

வினோதினி தொடரின் நாயகியாக ஆர்த்திகா நடித்துவரும் நிலையில், நாயகன் கிருஷ்ணாவின் மனைவியாக சல்மா நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு வினோதினி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகை தீபம் தொடருக்குப் பிறகு வினோதினி தொடரில் நடித்துவரும் ஆர்த்திகாவுக்கு இத்தொடரில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காரணிகளை எதிர்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெற எவ்வாறு போராடுகிறாள் வினோதினி என்ற அடிப்படையில் இத்தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா - ஆர்த்திகா
கிருஷ்ணா - ஆர்த்திகாபடம் - இன்ஸ்டாகிராம்

இத்தொடரில் நாயகனாக நடிக்கும் கிருஷ்ணாவுக்கு ஏற்கெனவே திருமணம் நடைபெற்று குழந்தையும் உள்ளது. அதன் ஃபிளாஷ்பேக் காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. இதில், நாயகனின் மனைவியாக நடிகை சல்மா நடித்து வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகு நாயகன் ஏழை எனத் தெரியவந்ததால், அவருடன் வாழ விரும்பாத சல்மா, கணவருடன் வாழ விருப்பமில்லை எனத் தெரிவித்து குழந்தையை எடுத்துச் சென்றுவிடுகிறார்.

மனைவியிடமிருந்து போராடி குழந்தையைப் பெற முயற்சிக்கிறார் நாயகன். இவை பிளாஷ்பேக் காட்சிகளாக வினோதினி தொடரில் ஒளிபரப்பாகிறது.

இந்தக் கதையை நாயகனின் தாயார், கதாநாயகி ஆர்த்திகாவிடம் கூறுகிறார். இதனால், பின்னாள்களில் இவர்கள் இருவரும் சேர வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | சீரியலுக்காக கட்டடத் தொழிலாளியாக மாறிய நடிகை!

Summary

Actress Salma has been signed to play the lead actors wife in the series Vinothini, which is being aired on Sun TV.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com