ராமாயணா படத்தின் அறிமுக விடியோ!

ரன்பீர், யஷ் நடிக்கும் ராமாயணா படத்தின் அறிமுக விடியோ குறித்து...
Scenes from the movie Ramayana.
ராமாயணா படத்தின் காட்சிகள். படம்: யூடியூப் / வேல்ட் ஆஃப் ராமாயணா.
Published on
Updated on
1 min read

ரன்பீர், யஷ் நடிக்கும் ராமாயணா முதல் பாகம் படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

நமீதா மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை நிதிஷ் திவாரி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ்ஷும் நடித்துள்ள ராமாயணா படத்தின் 3 நிமிடங்கள் கொண்ட அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தின் 7 நிமிட மற்றுமொரு க்ளிம்ஸ் விடியோ சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த விடியோவில் இந்தப் படம் எப்படி திட்டமிடப்பட்டு படமாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும் எனவும் க்ளிம்ஸ் விடியோ விரைவில் வெளியாகுமெனவும் கூறப்படுகிறது.

Summary

The teaser of the first part of Ramayana starring Ranbir and Yash has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com