ஹரி ஹர வீரமல்லு டிரைலர்!

பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு படத்தின் டிரைலர்...
Hari Hara Veeramallu movie poster.
ஹரி ஹர வீரமல்லு பட போஸ்டர். படம்: எக்ஸ் / ஏஎம் ரத்னம்.
Published on
Updated on
1 min read

பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு முதல் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஆந்திரத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) தயாராகி வருகின்றன.

சமீபத்தில் ஹரி ஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ரிலீஸ் தேதி 4 முறைக்கும் மேல் மாறிக்கொண்டே இருக்கும் இருந்தது.

கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கிய இப்படம் வருகிற ஜூலை 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

சமீபத்தில், இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘தாரா தாரா’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர்.

நாயகி நிதி அகர்வாலின் நடன காட்சிகள் நன்றாக இருப்பதுடன் மரகதமணியின் இசையமைப்பும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்து வருகிறது.

தமிழில் இப்பாடலைப் பா. விஜய் எழுத லிப்ஸியா, ஆதித்யா ஐயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரின் கிராபிக்ஸ் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Summary

The trailer of Pawan Kalyan's Hari Hara Veera Mallu has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com