
நடிகர் விஷ்ணு விஷாலும் அவரது தம்பியும் இணைந்து செய்த புரமோஷன் விடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
ரோமியோ பிக்சர்ஸ், விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்க, ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. காதலும் ஆக்சனும் கலந்த படமாக இது உருவாகியுள்ளது. டிரைலர் காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.
இப்படம் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது.
இந்நிலையில், 5 நாள்களே மீதமுள்ள நிலையில் 5 விதமான பாணியில் அதைக் கூறி ருத்ரா புரமோஷன் செய்துள்ளார்.
ருத்ராவுக்கு அருகில் விஷ்ணு விஷால் உட்கார்ந்து, “பரவாயில்லை டா என்னைவிட நல்லாவே நடிக்கிற” எனக் கூறுவது வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.