
சின்ன திரை நடிகை ஆல்யா மானசா நடிக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் சின்ன திரைக்கு வந்த ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் சந்தியா பாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களை வென்றார். இத்தொடரின் நாயகனாக சஞ்ஜீவ் நடித்திருந்தார்.
இத்தொடரில் கணவன் மனைவியாக நடித்த ஆல்யா - சஞ்ஜீவ், நிஜத்திலும் காதலர்களாகி கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்துக்குப் பிறகு ராஜா ராணி பாகம் 2 தொடரிலும் ஆல்யா மானசா நடித்திருந்தார். பின்னர், இத்தொடரில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இனியா தொடரில் நடித்து கம்பேக் கொடுத்து, தனது ரசிகர்கள் தக்கவைத்து கொண்டார்.
நடிகை ஆல்யா மானசா இனியா தொடருக்குப் பிறகு எந்த தொடரிலும் நடிக்காத நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இந்த புதிய தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அவரின் பதிவில், “புதிய தொடரில் புதிய கதை ஆரம்பிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தொடரில் ஆல்யா மானசாவுடன் ராஜ்காந்த், லதா ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்தொடரின் பெயர், ஒளிபரப்பு தேதி, முன்னோட்ட விடியோ தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கண்மணி - அஷ்வத் தம்பதியின் குழந்தை பெயர் தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.