
படப்பிடிப்பின்போது ஆட்டோ கண்ணாடி வெடித்துச் சிதறியதில் நடிகை வர்ஷினி சுரேஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நீ நான் காதல் தொடர் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை வர்ஷினி சுரேஷ்.
இத்தொடரில் அபி என்ற பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இவர், தொடர்ந்து ஹார்ட் பீட் வெப் தொடரில் சோனியா என்ற பாத்திரத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வழங்கி அசத்தினார்.
தற்போது, ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வரும் மகுவா ஓ மகுவா தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்படும் மகளே என் மருமகளே தொடரில் நடிகை வர்ஷினி சுரேஷ் நடிக்கிறார்.
இந்த நிலையில், வர்ஷினி சுரேஷ் நடிக்கும் தெலுங்கு தொடரான ஆட்டோ விஜயலட்சுமி சீரியல் படப்பிடிப்பின்போது, அவருக்கு முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதை வர்ஷினி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவில், “ படப்பிடிப்பில், சண்டைக் காட்சிகள் தொடர்பான காட்சி எடுக்கும்போது, நாங்கள் திட்டமிட்டப்படி நடக்காமல் ஆட்டோ கண்ணாடி வெடித்துச் சிதறியது.
கண்ணாடித் துண்டுகள் என் முகத்தின் இடத்தைப் பக்கத்தில் பட்டதில், சிறிய காயம் ஏற்பட்டதுடன், எனது இடது செவி கேளாமல் போனது.
இந்த விபத்து பெரியளவில் நடக்காமல் இருந்ததற்காக நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதற்காக அரைநாள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தேன், பெரிய காயங்கள் ஏதுமில்லை. இப்பயணம் எப்படி கணிக்க முடியாமலும், தீவிரமாகவும் இருக்கிறது என்பதற்கான நினைவூட்டல் மட்டுமே.
விரைந்து வந்து கவனித்துக் கொண்ட எங்கள் குழுவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை வர்ஷினி சுரேஷுக்கு அவரது ரசிகர்கள் கவனமுடன் பணியாற்றுமாறு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: நாளை (ஜூலை 11) வெளியாகிறது ஃப்ரீடம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.