இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக....
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

ஷ்ரத்தா ஶ்ரீநாத், 'ஆடுகளம்' கிஷோர் ஆகியோர் நடிப்பில் பிரமோத் சுந்தர் இயக்கத்தில் சைக்கலாஜிகல் திரில்லர் படமாக வெளியான கலியுகம் திரைப்படம், நாளை (ஜூலை 11) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கேரளத்தில் நடனம் கற்றுக்கொள்ள ஆசைப்படும் இளைஞர்களை மையப்படுத்தி உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட மூன் வாக் திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான அரசியல் ஆக்‌ஷன் திரைப்படமான நரிவேட்டை படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.

இந்திரஜித் சுகுமாரன் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படமான Mr & Mrs பேச்சுலர், மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை பார்க்கலாம்.

மாதவன் மற்றும் ஃபாத்திமா சனா ஷேக் நடித்த ஆப் ஜைஸா கோய் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

அனந்திகா சுனில்குமார், ரவி டுக்கிர்லா, ஹனு ரெட்டி பிரதான பாத்திரத்தில் நடித்த தெலுங்கு மொழிப் படமான 8 வசந்தலு, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான தக் லைஃப் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும், மெட்ராஸ் மேட்னி திரைப்படம் சன் நெக்ஸ்ட், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களிலும் பரமசிவன் பாத்திமா திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.

Summary

You can see which movies and web series are releasing this week on OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com