பாகுபலி, ஜவான் சாதனையை முறியடித்த ஒடிய திரைப்படம்!

ஒடிய மொழியில் வெளியான படமொன்று வசூலைக் குவித்து வருகிறது....
பாகுபலி, ஜவான் சாதனையை முறியடித்த ஒடிய திரைப்படம்!
Published on
Updated on
1 min read

ஒடியாவில் 'போ பட்டு பூதா' திரைப்படம் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.

இந்திய சினிமாவின் வரலாறு நூறாண்டைக் கடந்தாலும் சில மாநிலங்களில் சினிமாவின் வளர்ச்சி உருவாக்க ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பின் தங்கியே இருக்கின்றன.

அப்படி, ஒடிசா மாநிலத்தில் உருவாக்கப்படும் சினிமா, தொடர்கள், ஆல்பம் பாடல்கள் இப்போதுதான் ரசிக்கும் பாணிகளில் உருவாகி வருகின்றன.

இந்த வகையில், கடந்த ஜூன் 12 ஆம் தேதி ஒடிய மொழியில் ஜெகதீஷ் மிஸ்ரா இயக்கத்தில் பாபூஷண் மொகந்தி, அபாரஜிதா மொகந்தி நடிப்பில், ‘போ பட்டு பூதா - bou buttu bhuta’ (அம்மா, மகன் மற்றும் பூதம்) என்கிற திரைப்படம் வெளியானது.

ஹாரர் பின்னணியில் அமானுஷ்யங்களை உள்ளடக்கிய கதையாக உருவான இப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ஒடிசாவில் ரூ. 16 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இதுவே, ஒடிய மொழியில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கின்றனர். இதற்கு முன், அங்கு பாகுபலி, ஜவான் ஆகிய படங்கள் ஓரளவு வணிகம் செய்திருந்த நிலையில், மீண்டும் மீண்டும் ரசிகர்கள் போ பட்டு பூதா படத்தைப் பார்ப்பதால் மிகப் பெரிய வணிக வெற்றியை அடைந்துள்ளதாம்.

படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளதால் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டுகாக பலரும் காத்திருக்கின்றனர்.

bou buttu bhuta odisha movie make good buisness in box office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com