
காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற புதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தைப் போலவே ஒரு ஆண், இரு பெண்களுடன் கொள்ளும் காதல் கதையை மையமாக வைத்து நகைச்சுவை பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்படவுள்ளது.
எதன்மீதும் பற்றுதல் இல்லாத ஆணுக்கு வாழ்வில் முதல்முறையாக இரு பெண்களிடம் கிடைக்கும் காதலால், நம்பிக்கையும் மகிழ்ச்சியும் பிறக்கிறது.
அந்த இரு பெண்களுடனான உறவைத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் ஆணின் போராட்டத்தை நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதையுடன் இந்தத் தொடர் அமையும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராதிகா சரத்குமாரின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ரடான் மீடியா லிமிட்டெட், இந்தத் தொடரை தயாரிக்கிறது. இத்தொடரில் அனில் செளத்ரி நாயகனாகவும், பாப்ரி கோஷ் மற்றும் மெளனிகா நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.
இந்தத் தொடருக்கான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் ஏற்றுக்கொள்ள முடியாத ரெண்டு காதலை எவ்வாறு நியாயப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | சரோஜா தேவி ஏன் ஒரு நடிகரைத் திருமணம் செய்யவில்லை?
A new series titled Kathu Vaakula Rendu Kadhal will be aired on Kalaignar TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.