
பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரருமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் வாழ்ந்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்திரை ஜாம்பவான்கள் மூவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என மூவருக்குமே ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர்.
தன்னுடைய 17 வயதில் 1955ஆம் ஆண்டு, மகாகவி காளிதாசா என்ற கன்னட படத்தில் அறிமுகமாகி, தமிழில் கடைசியாக, நடிகர் சூர்யா - நடிகை நயன்தாரா நடிப்பல் வெளியான ஆதவன் திரைப்படத்திலும், கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான நட்டசாரகபவுமா என்ற படத்திலும் நடித்திருந்தார்.
நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர், தனக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாயகியாக, ஜெயலலிதாவுக்கு அடுத்து, சரோஜா தேவியைத்தான் நினைத்திருந்தார். அவருடன் சரோஜா தேவி 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
நாடோடி மன்னன், திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, பாசம், தர்மம் தலை காக்கும், பெரிய இடத்துப் பெண், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா உள்ளிட்ட படங்கள், எம்ஜிஆர் - சரோஜா தேவி நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டவை. இன்றளவிலும் இந்தப் படங்களைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டிருப்பதே, இப்படங்களின் வெற்றி. இவர்களுக்கு இடையே திரைப்பட பொருத்தம் மக்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.
இருவரும் இணைந்து கடைசியாக 1967ஆம் ஆண்டு அரச கட்டளை என்ற படத்தில் நடித்திருந்தனர். அதன்பிறகு, எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடிக்கு மக்களிடையே விருப்பம் அதிகரிக்கத் தொடங்கியது.
நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து சரோஜா தேவி 22 படங்களில் நடித்துள்ளார். அனைத்துமே சூப்பர் டூப்பர் படங்களாக அமைந்திருந்தன. அதில், தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, பாகப் பிரிவினை, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, ஆலயமணி உள்ளிட்டப் படங்கள், ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவை.
நடிகர் ஜெமினி கணேசனுடன் இணைந்து இவர் 17 படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜெமினி கணேசனுடன் இணைந்து இவர் 17 படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இணைந்து நடித்து வெளியான படங்களின் வரிசையில் கல்யாண பரிசு, கைராசி, பாசமும் நேசமும், தாமரை நெஞ்சம், கண் மலர், பணமா பாசமா, வாழ்க்கை வாழ்வதற்கே உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த ஜோடியையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இதையும் படிக்க.. நடிகை சரோஜா தேவி காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.