லோகேஷ் கனகராஜ் படம்... மிஸ்டர் பாரத் படப்பிடிப்பு நிறைவு!

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் மிஸ்டர் பாரத் படம் குறித்து...
Mr. Bhaarath shooting complete!
மிஸ்டர் பாரத் படப்பிடிப்பு நிறைவு.படம்: ஜி ஸ்குவாட்
Published on
Updated on
1 min read

லோகேஷ் கனகராஜ் தயாரித்த மிஸ்டர் பாரத் என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழில் வெற்றிபெற்ற இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் மூலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

மிஸ்டர் பாரத் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் இதில் யூடியூபர் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து சுதன் சுந்தரம், ஜகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளார்கள்.

பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் புரோமோ விடியோ ரசிக்கும் வகையில் இருந்தது.

லோகேஷின் தயாரிப்பில் வெளியான முதல்படம் ஃபைட் கிளப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் படம் வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Summary

The shooting of the film Mr. Bhaarath, produced by Lokesh Kanagaraj, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com