
ஜி.வி. பிரகாஷ் நடித்த பிளாக்மெயில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள திரைப்படம் பிளாக்மெயில்.
இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களின் இயக்குநர் மு. மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.
திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.
actor gv prakash's blackmail movie trailer out
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.