
நடிகர் அஜித் குமாரின் கார் விபத்து நடந்த விடியோவை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார்.
இந்த ஜிடி 4 கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் அவரது தவறு எதுவுமில்லை என்றாலும் சில ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமர்சித்து வந்தார்கள்.
பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் அதன் மீது அஜித்தின் கார் மோதியது. விபத்தில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக, காரில் இருந்த அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்த விபத்து ஏற்பட்டது எப்படி என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விடியோவை வெளியிட்டுள்ளார்.
நடிகரும் ரேஸருமான அஜித்திற்கு கார் விபத்து ஒன்றும் புதியதல்ல. பலமுறை இப்படி ஆகியிருப்பதால் அஜித் ரசிகர்களுக்கு இது பழகிப்போன விஷயமாகி விட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.