கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டுத் தேதி!

நடிகர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் மறுவெளியீடாகிறது...
கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டுத் தேதி!
Published on
Updated on
1 min read

மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்த்தின் 100-வது படமான இது அன்றைய நிலவரப்படி அதிக பொருள்செலவில் எடுக்கப்பட்டு திரையரங்குகளிலேயே 300 நாள்களுக்கு மேல் ஓடிய பிரம்மாண்ட திரைப்படமாகும்.

இதில், வில்லனாக மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தமிழில் உருவான அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரனுக்கு தனித்துவமான இடம் உண்டு என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்ததால் இதனை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி கேப்டன் பிரபாகரன் மறுவெளியீடாகும் என அறிவித்துள்ளனர்.

அதற்கான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

actor vijayakanth's captain prabhakaran movie rerelease date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com