ஓடிடியில் 3 பிஎச்கே எப்போது?

3 பிஎச்கே படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
3 பிஎச்கே பட போஸ்டர்
3 பிஎச்கே பட போஸ்டர்
Published on
Updated on
1 min read

3 பிஎச்கே படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக தகவல் தெரியவந்துள்ளது.

சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, இவரது 40-வது படமாக '3 பிஎச்கே' படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படம் சொந்த வீட்டை வாங்க ஒரு நடுத்தர குடும்பம் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதைப் பதிவுசெய்திருந்தது.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், 3 பிஎச்கே திரைப்படம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Information has been revealed regarding the OTT release of the film 3BHK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com