சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ்: மின்னலி பாடலின் புரோமோ!
ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் மின்னலி பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் வழங்கும் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் கவனம் ஈர்த்தது.
இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள படம் ’ஹவுஸ் மேட்ஸ்’. இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
எஸ். விஜயபிரகாஷ் தயாரிப்பில், ராஜேஷ் முருகேசன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது.
மேலும் இந்த படத்தில், நடிகர்கள் அர்ஷா பைஜு, வினோதினி, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘ஹவுஸ் மேட்ஸ்’ வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மின்னலி பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
இதன் முழுமையான பாடல் விடியோ நாளை (ஜூலை 26) மாலை 5 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
The promo video of the song Minnaali from the movie Housemates has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.