

தமிழில் வரவேற்பைப் பெற்றதால் தலைவன் தலைவி திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் நேற்று (ஜூலை 25) உலகம் முழுவதும் 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மெனன் நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் உருவாகியுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்தப் படத்தில் யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாம் சிரிக்க வைக்க தவறுவதில்லை என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையில் ’என்னடி சித்திரமே’ என்ற பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தெலுங்கிலும் ஆக.1 முதல் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.