தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குற்றம் கடிதல் - 2 டீசர்!

குற்றம் கடிதல் - 2 திரைப்படத்தின் டீசர் வெளியீடு...

News image
Updated On :28 ஜூலை 2025, 7:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய விருது பெற்ற குற்றம் கடிதம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குற்றம் கடிதல். சுயாதீன திரைப்படமாக உருவான இது, கல்விப் பின்னணியில் வெவ்வேறு வாழ்க்கைத்தரங்களில் வாழும் மனிதர்கள் குறித்தும் ஓர் எதிர்பாராத நிகழ்வு இவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் மையப்படுத்தியிருந்தது.

திரைக்கு வருவதற்கு முன்பே பல சர்வதேச திரைவிழாக்களில் பங்கேற்று அங்கீகாரம் பெற்ற இப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும் வென்று அசத்தியது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளனர். தயாரிப்பாளர் ஜேஎஸ்கே தயாரித்து திரைக்கதை எழுதிய இப்படத்தை எஸ்கே ஜீவா இயக்கியுள்ளார்.

ஜேஎஸ்கே, அப்புக்குட்டி, பாலாஜி, சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

YouTube video thumbnail

kutram kadithal 2 movie teaser out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.