துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா கிளிம்ஸ்!

ஆகாசம்லோ ஒக தாரா படத்தின் கிளிம்ஸ்...
நடிகர் துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான்
Updated on
1 min read

நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் புதிய தெலுங்கு படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் கேம் என்கிற படத்திலும் தமிழில் காந்தா படத்திலும் நடித்து வருகிறார்.

அதேநேரம், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். மென்மையான இசையுடன் துல்கர் பயணம் செய்வது போன்ற காட்சிகள் கவனம் ஈர்த்துள்ளன.

dulquer salmaan's aakasamlo oka tara movie glimpse

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com