நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் கவனம் ஈர்த்துள்ளன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் டிரைலர் ஆக. 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அன்றிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவிடும் என்பதால் பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட முனைப்பு காட்டியுள்ளனர்.
கூலி திரைப்படம் 2.50 மணி நேரம் கால அளவு கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டைக் காட்சிகள் இருப்பதால், படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், படத்திற்கான புரமோஷன்களை வித்தியாசமான முறையில் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, லண்டனில் சில பெண்கள் கூலியில் இடம்பெற்ற சிக்குது பாடலுக்கு நடனமாடிய விடியோ கவனம் ஈர்த்துள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் அமேசான் தளத்தில் பொருள்களை வாங்குபவர்களுக்கு கூலி படத்தைக் குறிப்பிட்ட பெட்டிகளில் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த வகையில் மார்கெட்டிங் செய்யும் முதல் இந்தியப் படம் கூலிதானாம்!
இதையும் படிக்க: இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? பிளாக்பஸ்டரான சு ஃப்ரம் சோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.