இயக்குநர் மணிரத்னம் படங்களின் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட விடியோ கவனம் பெற்று வருகிறது.
1983-ல் பல்லவி அனு பல்லவி திரைப்படம் மூலம் இயக்குநராக திரைத்துறைக்கு அறிமுகமான மணிரத்னம் நாயகன், மௌனராகம், தில் சே, அலைபாயுதே, கண்ணத்தில் முத்தமிட்டால், பொன்னியின் செல்வன் வரை பல வெற்றி படங்களைக் கொடுத்துவிட்டார்.
தமிழில் மட்டுமல்லாது இந்தியளவிலும் மரியாதை செலுத்தப்படும் இயக்குநராகவே வலம்வரும் மணிரத்னம், தற்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கியுள்ளார். இது அவரது 29-வது படமாகும்.
இப்படம் ஜூன் 5 ஆம் தேதி உலகளவில் 4000 திரைகளுக்குமேல் வெளியாகிறது. கேங்ஸ்டர் பின்னணியில் உணர்வுப்பூர்மான கதையாகவே படத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கோகுல் வெங்கட் ராஜா என்பவர் தன் யூடியூப் சேனலில் மணிரத்னம் இயக்கிய படங்களின் முக்கியமான காட்சிகளைக் கொண்டு அட்டகாசமான விடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
மணிரத்னத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களைக் குளோஸ்-அப்பில் வைத்து, அவர் படங்களின் வசனங்களையே விடியோவின் சுவாரஸ்யத்திற்காக இணைந்துள்ளார்.
தி வெர்ல்ட் ஆஃப் மணிரத்னம் (the world of maniratnam) எனப் பெயரிடப்பட்ட இந்த விடியோ ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த விடியோவை இயக்குநர் மணிரத்னம் பார்க்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தக் லைஃப் டிக்கெட் முன்பதிவு மந்தம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.