மறு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர்!

பாரதி கண்ணம்மா தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்படுவது குறித்து...
மறு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர்!
Published on
Updated on
1 min read

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாரதி கண்ணம்மா தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பிரபலமடைந்த தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடர் கணவன் - மனைவி இடையே நடக்கும் புரிதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

இத்தொடரில் ரோஷினி, அருண்பிரசாத், ஃபரீனா, ரூபாஸ்ரீ உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். 2019 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இத்தொடர் 2023 பிப்ரவரி வரை 1000 எபிஸோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. ரோஜா தொடரில் நடித்து கவனம் ஈர்த்த சிபு சூர்யன், விணுஷா தேவி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆனால் இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், 115 எபிஸோடுகள் வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு விரைவில் முடிக்கப்பட்டது.

பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டு பாகங்களையும் பிரவீன் பென்னட் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தை மீண்டும் ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி, இத்தொடர் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினந்தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: என்றும் உங்கள் நண்பன்... மணிரத்னத்தை வாழ்த்திய கமல்ஹாசன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com