மன்னிப்புக் கேட்காத கமல்: கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு

கமல் மன்னிப்புக் கேட்காத நிலையில், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தக் லைஃப் போஸ்டர்
தக் லைஃப் போஸ்டர்
Published on
Updated on
1 min read

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மநீம தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்காக மன்னிப்புக் கேட்காததால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கன்னட மொழி குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், கமல் தரப்பில் நேரடியாக மன்னிப்புக் கேட்காததால், தக் லைஃப் படம் கர்நாடகத்தில் வெளியாவது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரம் கால அவாகசம் வேண்டும் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கேட்டிருந்தது. இதனைக் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, நாங்கள் மன்னிப்புக் கோரவில்லை. கன்னட ஃபிலிம் சேம்பர்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோருகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்துக் கொள்வதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில் கர்நாடகத்தில் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று காலை முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடகத்தில், தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை, இன்று பிற்பகலில் மீண்டும் தொடங்கியபோது, கமல் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னடம் குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிப்பதாக கமல் அளித்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், மன்னிப்புக் கேட்கச் சொன்னால் ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறீர்கள், மன்னிப்புக் கேட்பதில் அப்படி என்ன ஈகோ என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கமல் தரப்பிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதையடுத்து, கன்னட ஃபிலிம் சேம்பருடன் பேசுமாறு கமல் தரப்புக்கு அறிவுரை வழங்கி, வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com