
சின்ன மருமகள் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "சின்ன மருமகள்". மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது விருவிருப்பை எட்டியுள்ளது.
பொதுவாகவே நெடுந்தொடருக்கு, இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, தனி வரவேற்பு உண்டு.
அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் சிக்கியுள்ள, தமிழ்செல்வியின் கதையை சொல்லும், "சின்ன மருமகள்" தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்தொடரின் கதை, இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் தமிழ்ச்செல்வி, திருமணமான நிலையில், மாமியார் வீட்டின் சிக்கல்களால், தான் கருவுற்று இருப்பதாகப் பொய் சொல்கிறாள்.
அந்த உண்மை தெரியவர, அவள் தந்தை வீட்டுக்கு விரட்டப்படுகிறாள். ஆனால் தந்தையும் கடன் வாங்கி குடித்துவிட்டுத் திரிய, தந்தை வீட்டை உதறுகிறாள். அவள் உண்மையிலேயே கருவுற்று இருக்கிறாள் என்பது தெரிய வர, அதை நம்ப மறுக்கும் கணவனையும் உதறி, நான் தனியாக என் கனவை அடைவேன் எனச் சவால் விட்டுக் கிளம்புகிறாள்.
தனியாகக் கணவனையும், தந்தையையும் எதிர்த்து வெளியே வரும் தமிழ்ச்செல்வி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வாள்? தடைகளை மீறி அவள் ஜெயிப்பாளா?, அவள் மருத்துவகனவு என்னவாகும்? என, இந்தத் தொடர் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் காணலாம்.
இதையும் படிக்க: தக் லைஃப்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.