சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!

சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!

சூர்யா - 46 படப்பிடிப்பு ஆரம்பம்....
Published on

சூர்யா - 46 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் திரையரங்கம் மற்றும் ஓடிடி உள்பட இதர உரிமங்களுடன் ரூ. 235 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

ரெட்ரோவை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

அடுத்ததாக, நடிகர் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்க, நாக வம்சி தயாரிக்கிறார். படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

அப்போதே, படப்பிடிப்பு துவங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், திரைக்கதை முழுமையடைய தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், படத்தின் படப்பிடிப்பை இன்று துவங்கியுள்ளனராம். இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com