அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் தீபிகா படுகோன்!

அட்லீ இயக்கும் புதிய படத்தில் தீபிகா படுகோன் இணைந்தது குறித்து...
deepika padukone from atlee film.
தீபிகா படுகோன். படம்: சன் பிக்சர்ஸ்
Published on
Updated on
1 min read

இயக்குநர் அட்லீ இயக்கும் அல்லு அர்ஜுன் படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை விடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்திற்குப் பின் இயக்குநர் அல்லு அர்ஜுன் இயக்கத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

இந்தப் படம் அட்லீயின் 6ஆவது படமாகவும் அல்லு அர்ஜுனின் 22ஆவது படமாகவும் உருவாகிறது.

படத்தின் கதை விஎஃப்எக்ஸ் காட்சிகளால் நிறைந்துள்ளதால் ஹாலிவுட்டின் பிரபல விஎஃப்எக்ஸ் நிறுவனங்களிடம் அதற்கான பணிகளை அட்லி ஒப்படைத்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இப்படத்தில் 6 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், சமந்தா எனப் பலர் இருப்பார்கள் என வதந்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் நடிகை தீபிகா படுகோன் படத்தில் இணைந்திருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

அட்லீ கதை சொல்லி தீபிகா படுகோன் அதை ரசித்து கேட்டு, விஎஃப்எக்ஸ் பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் விடியோவாக வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com