sivakarthikeyan new movie
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை?

சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து...
Published on

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில், மதராஸி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். தொடர்ந்து, பராசக்தி படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

பராசக்தியை முடித்ததும் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் இப்படம் டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கயாது லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கயாது லோஹர்
கயாது லோஹர்

டிராகன் படத்தின் மூலம் பிரபலமடைந்த கயாது லோஹர் அதர்வாவின் இதயம் முரளி, எஸ்டிஆர் - 49 படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com