Basil joseph, allu arjun makes new super hero film
பாசில் ஜோசப், அல்லு அர்ஜுன். கோப்புப் படங்கள்.

பாசில் ஜோசப் இயக்கும் சூப்பர் ஹீரோ கதையில் அல்லு அர்ஜுன்?

மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் - தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி குறித்து...
Published on

மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் சூப்பர் ஹீரோ படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்னல் முரளி படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் இயக்குநர் பாசில் ஜோசப். தற்போது, முழுநேர நடிகராக மாறியுள்ளார்.

சமீபத்திய பாசில் ஜோசப் படங்கள் எல்லாமே ஹிட் அடித்தன. புஷ்பா -2 படத்துக்குப் பிறகு அட்லியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற ஆர்வம் மேலிட்ட நிலையில், பாசில் ஜோசப் அவரிடம் கதையைக் கூறியுள்ளார்.

பாசில் ஜோசப் கூறிய சூப்பர் ஹீரோ கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை.

ஒருவேளை இந்தப் படம் உருவானால், கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் எனவும் இசை ஜேக்ஸ் பிஜோய் இருக்குமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கு நடிகர், மலையாள இயக்குநர் சேர்ந்தால் கமர்ஷியலில் புதிய பரிணாமம் கிடைக்குமென அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com