
நடிகர் நானியைச் சந்தித்து டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் வாழ்த்து பெற்றார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி என பலரும் தங்களது எக்ஸ் பதிவுகளில் பாராட்டி இருந்தார்கள்.
இந்நிலையில், இயக்குநர் அபிஷன் ஜீவிந் நானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இளம் இயக்குநர்களை எப்போதும் உற்சாகமூட்டுபவராக நானி இருக்கிறார்.
சசிகுமாருடன் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்த இந்தப் படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
கடந்த ஜூன் 2 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.
நானியை சந்தித்தது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அபிஷன் ஜீவிந் கூறியதாவது:
என்ன ஒரு நாள்! நானி சார் உங்களை சந்தித்தது மிகவும் கௌரமானது. நீங்கள் மிகவும் தன்னடக்கமான மனிதர். நீங்கள் படத்தைப் பற்றி நுணுக்கமாக பேசியது என்னை கூடுதல் சிறப்பானவனாக உணர வைத்தது. நன்றி எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.