பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை திருமண மோசடி செய்தாரா? தொழிலதிபர் புகார்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை ரிஹானா பேகம் மீது திருமண மோசடி புகார்.
pandian stores serial
சக நடிகைகளுடன் ரிஹானா பேகம் (மத்தியில்)இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரிஹானா பேகம் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருமண மோசடி புகார் அளித்துள்ளார்.

பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தி பாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரிஹானா பேகம். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவர் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை மோசடி செய்து திருமணம் செய்துகொண்டதாகப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புகாரில் ரிஹானாவுக்கு ஹிஸ்புல்லா என்பவருடன் முன்பே திருமணம் நடந்திருப்பதாகவும், ஆனால், அவரை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி தன்னைத் திருமணம் செய்துகொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

ஹிந்து மத முறைப்படி திருமணம் நடந்த நிலையில், அடகு வைத்த நகைகளை மீட்பது, அடிக்கடி செலவுக்கு என இதுவரை லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 18.5 லட்சத்தை ரிஹானாவுக்கு கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஹிஸ்புல்லாவுடன் அவர் விவாகரத்து செய்யவில்லை என்பது பின்னாளில்தான் தனக்குத் தெரியவந்தது எனப் புகாரில் தெரிவித்துள்ளார். ரிஹானா தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாகவும், இதனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ரிஹானா
நடிகை ரிஹானாஇன்ஸ்டாகிராம்

சமூக வலைதளப் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய ரிஹானா, சின்ன திரை நடிகைகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அர்னவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை ஏற்பட்டபோது திவ்யாவுக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார்.

இதேபோன்று, சின்ன திரை நடிகை சம்யுதா மற்றும் அவருடைய கணவருக்கு பிரச்னை ஏற்பட்ட போது சம்யுதாவின் கணவருக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நாயகன்! தொடர் முடிய காரணமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com