
பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நம்ம வீட்டு பொண்ணு, வீட்டுக்கு வீடு வாசப்படி உள்ளிட்ட வெற்றித் தொடர்களை இயக்கியவர் பிரவீன் பென்னட்.
இவர் இயக்கும் தொடர்களைப் பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் இயக்கும் தொடர்கள் எப்போதும் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும். இவர் தற்போது மகாநதி தொடரை இயக்கி வருகிறார். இத்தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் பிரவீன் பென்னட் புதிய தொடரை இயக்குகிறார். இத்தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா, கனா தொடர் நாயகி தர்ஷனா, நீ நான் காதல் நாயகன் பிரேம் ஜேக்கப் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தற்போது குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் மகாநதி, அய்யனார் துணை ஆகிய தொடர்களை தயாரித்து வரும் நிலையில், இப்புதிய தொடரையும் தயாரிக்கிறது. இத்தொடருக்கான வசனங்களை பிரியா தம்பி எழுதுகிறார்.
நடிகை அன்ஷிதாவை மீண்டும் தொடரில் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப் புதிய தொடரின் பூஜை அண்மையில் நடைபெற்றுள்ளது. இத்தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தொடர் குழுவினர் பலர் பங்கேற்றுள்ளனர்.
எனினும், இத்தொடருக்கான பெயர், ஒளிபரப்பு தேதி உள்ளிட்ட பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நாயகன்! தொடர் முடிய காரணமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.