அதர்வா எதிர்பார்த்த வெற்றி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நடிகர் அதர்வா நடித்துள்ள டிஎன்ஏ திரைப்படம் குறித்து...
DNA Movie Poster
டிஎன்ஏ திரைப்பட போஸ்டர். படம்: எக்ஸ் / ஒலிம்பியா மூவிஸ்
Published on
Updated on
1 min read

நடிகர் அதர்வா நடித்துள்ள டிஎன்ஏ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் அதர்வா உடன் நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.

கிரைம் திரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்தப் படம் குடும்பத்தினரையும் கவரும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ஒருவர், “நடிகர் அதர்வா நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த வெற்றி இதுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “பெண்கள் நிச்சயமாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் கயல் தேவராஜ் இந்தப் படம் குறித்து, “ தமிழில் மகாராஜா படத்தைத் தொடர்ந்து மகத்தான ஒரு படைப்பு இந்த டிஎன்ஏ. பெண்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

ஆண்கள் தவறாமல் அவர்களை திரையரங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இது படமல்ல; விழிப்புணர்வு பற்றிய பாடம்” எனக் கூறியுள்ளார்.

இந்தப் படம் அதர்வாவிற்கு நிஜமாகவே கம்பேக் படமென தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com