விரைவில் வெளியாகும் ஏகே 64 அறிவிப்பு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் அஜித்தின் 64-ஆவது திரைப்படம் குறித்து...
அஜித் குமார்
அஜித் குமார்படம்: எக்ஸ் / சுரேஷ் சந்திரா.
Published on
Updated on
1 min read

நடிகர் அஜித்தின் 64-ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகுமென அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் குமார் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போதைய தகவல்படி, ஏகே - 64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் வேல்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை குட் பேட் அக்லி போல் ரசிகர்களைக் கவரும் விதமாக எடுக்க இயக்குநர் ஆதிக் திட்டமிட்டுள்ளதாகவும் படத்தின் பட்ஜெட் ரூ. 250 கோடிக்கும் மேல் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதே பட்ஜெட் அதிகரிப்பிற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் முகப்பு பக்கத்தில் ‘ஏகே 64 விரைவில் அறிவிப்பு’ என மாற்றியுள்ளார்.

Suresh Chandra's home page.
சுரேஷ் சந்திராவின் முகப்பு பக்கம். படம்: எக்ஸ் / சுரேஷ் சந்திரா.

இந்த அறிவிப்பினால் அஜித் ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

Summary

Actor Ajith's manager Suresh Chandra has said that an update on his 64th film will be released soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com