
ஆஸ்கர் விருதுக்கான வாக்களிக்கும் குழுவில் கமல் உள்பட 534 பேருக்கு ஆஸ்கர் அகாதமி குழு அழைப்பு விடுத்துள்ளது.
உலகில் ஆஸ்கர் விருதுகென்று தனி மதிப்பும் மரியாதையும் உருவாகியிருக்கிறது.
இந்தியாவின் சார்பில் கடந்த காலங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கும், எம்.எம்.கீரவாணி பாடலுக்காகவும் கிடைத்திருக்கின்றன.
ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, பாயல் கபாடியா, கமல் ஹாசன், அமெரிக்க நடிகை அரியானா கிராண்டி என 534 பேருக்கு இந்தமுறை ஆஸ்கர் விருது தேர்வில் வாக்களிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமலுக்கு இந்த அழைப்பு கௌரமாக கருதப்படுகிறது. ஏற்கெனவே, நடிகர் சூர்யா இந்தக் குழுவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் அகாதெமி குழு நேற்று (ஜூன் 26) இந்த வாக்களிப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
இந்த 534 பேரும் அழைப்பை ஏற்றுக்கொண்டால் ஆஸ்கர் குழுவில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 11, 120-ஆக உயரும். அதில், வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை 10,143-ஆகவும் உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா 2023 ஆஸ்கர் விருது தேர்வில் வாக்களித்ததை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தது கவனிக்கத்தக்கது.
Summary
Kamal Haasan and Ayushmann Khurrana along with Ariana Grande are among 534 individuals who were invited to join the Academy of Motion Picture Arts & Sciences.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.