பறந்து போ படத்தை எடுக்க இதுதான் காரணம்: இயக்குனர் ராம்

அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்துதான் பறந்து போ படத்தை எடுத்ததாக இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.
Director ram
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் இயக்குனர் ராம்.
Published on
Updated on
1 min read

அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்துதான் பறந்து போ படத்தை எடுத்ததாக இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இப்படம் ஜூலை 4 தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கோவை பிராட்வே சினிமாவில் திரையிடப்பட்டது. இதனை பள்ளி மாணவர்கள், குடும்பத்தினர் கண்டுகளித்தனர்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் ராம் பார்வையாளர்களிடம் இந்த திரைப்படம் குறித்து கலந்துரையாடி படம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் ராம், இந்தியாவின் முதல் பிரிமியர் ஷோ இது. அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்த படத்தை எடுத்தேன்.

அதேபோல் பல்வேறு இடங்களில் அதிக சிரிப்புகளை பார்க்க முடிந்தன. இந்த படம் குழந்தைகளுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து வாழ்வும் பெற்றோர்களுக்குதான். இதுகுறித்து நான் சிறுவர்களிடம் கேட்டபோது கூட அப்பாக்கள்தான் பொய் கூறுகிறார்கள், அம்மாக்கள் பொய் கூறவில்லை என்றார்கள்.

நா.முத்துக்குமாரை அனைவரும் மிஸ் செய்கிறோம். ஜூலை 19ம் தேதி நா.முத்துகுமாரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு விழா நடத்துகிறோம். அந்த விழா அவரின் புகழை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும். மலை ஏறினால் மகத்தான விஷயங்கள் கிடைக்கும். நடிகை அஞ்சலி எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தவர்.

இந்த படத்திலும் நடத்துள்ளார். உண்மைத்தனமான படங்களை மக்கள் ரசிக்கிறார்கள். மக்கள் பிரமாண்டம் என அனைத்தையும் விரும்புவார்கள். மேலும் மக்கள் சுவாரஸ்யம் நிறைந்தது கவலைகளை மறப்பது போன்ற படங்களை ஏற்று கொள்கிறார்கள். உச்சபட்ச நடிகர்கள் அழைத்தால் படம் செய்வேன், ஆர்வம் உள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் கண்டிப்பாக வேண்டும் என்றார். அதேசமயம், நடிகர்கள் போதைப் பொருட்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.

Summary

Director Ram has said that he made the film Parandhu Po thinking that everyone would laugh.

இதையும் படிக்க... மக்களின் பாக்கெட்டை காலி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுச் செயல்படுகிறது: காங். விமர்சனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com