
சூர்ய வம்சம் காட்சியைப் போலவே 3 பிஎச்கே படக்குழு மறு உருவாக்கம் செய்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சரத்குமார் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சூர்ய வம்சம் படத்தின் காட்சியை புரமோஷனுக்காக 3 பிஎச்கே படக்குழு மறு உருவாக்கம் செய்துள்ளார்கள்.
அந்தப் படத்தில் சரத்குமாரை ஒத்துக்கி வைத்து விட்டு புகைப்படம் எடுக்கும் மிகவும் புகழ்பெற்ற காட்சியை எடுத்துள்ளார்கள். அதில் ”என்ற குடும்பத்தில் எல்லாரும் வந்துட்டார்கள்” என்ற வசனத்தை எடுத்துள்ளார்கள்.
சரத்குமார் கதாபாத்திரத்தில் சித்தார்த் ஓரமாக நின்று பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து, இவரது 40-வது படமாக '3 பிஎச்கே' படத்தில் நடித்துள்ளார்.
எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சரத் குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
A video recreated by the 3BHK team, similar to a scene from Surya Vamsam, is going viral on social media. actor siddharth acting like sarath kumar It has attracted attention among fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.