நல்ல படங்களை காலம்தான் தீர்மானிக்கும்: மகிழ் திருமேனி

தடையறத் தாக்க, விடாமுயற்சி படங்கள் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி பேசியதாவது...
The poster of the film, starring actor Ajith and director Magizh Thirumeni.
தடையறத் தாக்க போஸ்டர், நடிகர் அஜித்துடன் இயக்குநர் மகிழ் திருமேனி. படங்கள்: எக்ஸ் / லைகா, அருண் விஜய்.
Published on
Updated on
1 min read

இயக்குநர் மகிழ் திருமேனி, எது நல்ல படம் என்பதை காலம்தான் தீர்மானிக்கும் எனக் கூறியுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2012 -இல் தடையறத் தாக்க திரைப்படம் வெளியானது.

திரையரங்கில் கவனம் பெறாமல் சென்ற இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே பின்னாள்களில் உருவானார்கள்.

இந்தப்படம் நேற்று (ஜூன் 27) மறுவெளியீடானது. ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் நல்ல திரைக்கதையுடன் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகக் கொண்டாடப்பட்டது.

Thadaiyara Thakka film poster
தடையறத் தாக்க பட போஸ்டர்.படம்: எக்ஸ் / அருண் விஜய்.

அருண் விஜய்க்கும் திருப்புமுனை படமாக அமைந்ததுடன் இன்றுவரை மகிழ் திருமேனியின் சிறந்த படமாகவும் பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தை இயக்கியிருந்தார். அந்தப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசியதாவது:

தடையறத் தாக்க படத்தினை திரையரங்கில் பார்த்தவர்களுடன் இணையத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்தோமானால் இந்தப்படம் அந்தாண்டு வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியிருக்கும்.

ஒரு படம் வெற்றிப் படமா இல்லையா என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ஆனால், ஒரு படம் நல்ல படமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்றார்.

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிகர் அஜித்துடன் நிச்சயமாக படத்தை இயக்குவேன் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com