முதலிடத்தில் சிறகடிக்க ஆசை! தமிழ் நாட்டின் டாப் 5 தொடர்கள் என்னென்ன?

சின்ன திரையில் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று சிறகடிக்க ஆசை தொடர் முதல் இடத்தில் உள்ளது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை படம் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

சின்ன திரையில் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று சிறகடிக்க ஆசை தொடர் முதல் இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ள தொடர்கள் குறித்து காணலாம்.

சிறகடிக்க ஆசை

சின்ன திரையில் பல்வேறு மாற்றங்கள் இந்த வாரத்தில் நிகழ்ந்துள்ளன. சன் தொலைக்காட்சி தொடர்களை பின்னுக்குத்தள்ளி, விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடம் பிடித்துள்ளது.

வெற்றி வசந்த் - கோமதி பிரியா முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் இந்தத் தொடர், நடுத்தர குடும்பத்து பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதால், பலரை சிறகடிக்க ஆசை தொடர் கவர்ந்துள்ளது.

கயல்

இரண்டாவது இடத்தில் கயல் தொடர் உள்ளது. சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்தொடர், வலுவான கதையம்சத்துடன் எடுக்கப்பட்டு வருகிறது. முதலிடத்தை தவறவிட்டிருந்தாலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தத் தொடர் அடிக்கடி முதலிடத்தை பிடித்து வருகிறது.

சிங்கப் பெண்ணே

மூன்றாவது இடத்தில் சிங்கப்பெண்ணே தொடர் உள்ளது. சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் மணீஷா கிராமத்துப் பெண் பாத்திரத்திலும், நகரத்துக்கு வரும் பெண்ணுக்கு ஆதரவு அளிக்கும் அன்பு என்ற பாத்திரத்தில் அமல்ஜித்தும் நடித்து வருகின்றனர். குடும்பத்தின் ஏழ்மையான சூழலை மாற்ற கிராமத்துப் பெண் போராடி, நகரத்து வாழ்க்கையில் வெற்றிபெறத் துடிப்பதே இக்கதையின் மையக்கருவாகும்.

மூன்று முடிச்சு

நான்காவது இடத்தில் மூன்று முடிச்சு தொடர் உள்ளது. சன் தொலைக்காட்சியில் இந்தத் தொடரில், ஸ்வாதி கொண்டே - நியாஸ் கான் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரீத்தி சஞ்சீவ், பிரபாகரன் சந்திரன், கார்த்திகா லட்டு, தர்ஷனா ஸ்ரீபால் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடரில் நடிகர்களின் அழுத்தமான நடிப்பு ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளதால், அதிக டிஆர்பி பெற்றுள்ளது.

எதிர்நீச்சல் -2

ஐந்தாவது இடத்தில் எதிர்நீச்சல் -2 தொடர் உள்ளது. இந்தத் தொடர் முதல் பாகத்தின் நீட்சி என்றாலும், கதைக்களம் சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து நீடித்து வருகிறது. நாயகி, நாயகனை மட்டும் மையப்படுத்தி கதை நகராமல், நடிக்கும் அத்தனை பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், சலிப்பின்றி ரசிகர்களை தக்கவைக்க இந்தத் தொடரால் முடிகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் எந்தவொரு தொடரும் டாப் 5 பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | எதிர்நீச்சல் -2 தொடரிலும் நடிக்கும் இயக்குநர் திருச்செல்வம்!

Summary

vijay TVs Sirakadikka Aasi" is at the top of the list for getting the highest TRP points on tamil serials.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com