
தனது சமூகவலைதளப் பக்கம் (எக்ஸ்) முடக்கப்பட்டுள்ளதால் அதில் பதிவிடப்படும் தகவல்கள், இணைப்புகளை நம்ப வேண்டாம் என ரசிகர்களிடம் பாடகி ஸ்ரேயா கோஷால் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிப். 13ஆம் தேதிமுதல் தனது எக்ஸ் தளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் உள்பட பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்பட பாடல்களைப் பாடி பிரபலமடைந்தவர் பாடகி ஸ்ரேயா கோஷால். ஏ.ஆர். ரஹ்மான், டி.இமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், ஹிந்தி மொழிகளில் முன்னணிப் பாடகியாக உள்ளார்.
தமிழில் நாயகியாக நடிக்க வாய்ப்புகள் தேடிவந்தும், அதனை மறுத்து பாடகியாகவே திரைத்துறையில் நீடித்துவருகிறார்.
தனது குரலால் பலரைக் கவர்ந்த ஸ்ரேயா கோஷால், எக்ஸ் பக்கத்தில் 69 லட்சம் பேர் பின்தொடர்ந்துவந்தனர்.
சமீபத்தில் உடல் பருமன் பிரச்னைக்கு எதிராக 10 சதவீதம் எண்ணெயை குறைப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்திற்காக பிரதமர் மோடி 10 பேரை தேர்வு செய்தார். அதில் ஸ்ரேயா கோஷலும் இடம்பெற்று இருந்தார். இதற்கு சமூகவலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இதனிடையே பிப். 13ஆம் தேதி தனது எக்ஸ் தளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ஸ்ரேயா கோஷால் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ள அவர், ’’தனது எக்ஸ் தள கணக்கை யாரோ பிப்ரவரி 13ஆம் தேதியில் இருந்து (ஹேக்) முடக்கிவிட்டனர். கணக்கை மீட்க முயற்சி மேற்கொண்டாலும் முடியவில்லை. அதனால் தனது எக்ஸ் பக்கத்தில் வரும் பதிவுகள், குறுஞ்செய்திைகள் மற்றும் இணைப்புகளை யாரும் நம்ப வேண்டாம்’’ என எச்சரித்துள்ளார்.
பிரபலங்களில் சமூகவலைதளப் பக்க கணக்குகளுக்கு இவ்வாறு அடிக்கடி நிகழ்வதாக, திரைத்திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.