
சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி விருதுகள் (ஐஐஎஃப்ஏ) விழாவில் முன்னாள் காதலர்களான கரீனா கபூர், ஷாகித் கட்டியணைத்த புகைப்படங்கள், விடியோக்கள் வைரலாகி வருகின்றன.
ஐஐஎஃப்ஏ விழா தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகின்றன. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்த விழாவில் 4-5 ஆண்டுகள் காதலித்து பின்னர் பிரிந்த முன்னாள் காதலர்களான கரீனா கபூர், ஷாகித் கபூர் மேடையில் கட்டியணைத்து சகஜமாக பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இரண்டு பேரும் ஜப் வி மீட் என்ற 2007இல் வெளியான படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு ஹிந்தியில் ரொமான்ஸ் படங்களுக்கென ஒரு புதிய பாதை திறந்தது.
இந்தப் படத்துக்குப் பிறகு கரீனா கபூர் 2012இல் சயிப் அலி கானை திருமணம் செய்துகொண்டார். ஷாகித் கபூர் மிரா ராஜ்புத்தை 2015இல் திருமணம் செய்தார். இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்த விழாவில் கரீனா கபூர், ”வணக்கம். இங்கிருப்பது எனக்கு நன்றாக இருக்கிறது. என்னை இங்கு நடனமாட அழைத்ததுக்கு ஐஐஎஃப்ஏ-க்கு மிக்க நன்றி. என்னுடைய நடனம் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இது என்னுடைய தாத்தா ராஜ் கபூரின் 100ஆவது ஆண்டு. அவருக்கு நாங்கள் இதை பாராட்டும்படியாக செய்யவிருக்கிறோம்.
நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இது மிகவும் நெகிழ்ச்சியான தருணம். நாளைய இரவுக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறினார்.