

நடிகர் அஜித்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்திற்கான வணிகமும் பெரிதாக இருக்கும் என்றே தெரிகிறது.
முக்கியமாக, உலகளவில் 2000 திரைகள் வரை திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் அஜித் தனது பட வேலைகளை முடித்து கார் ரேஸிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை. அதனால் குட் பேட் அக்லி படத்தை மிகவும் நம்பியுள்ளார்கள்.
இந்நிலையில் அஜித்தின் கார் விடியோக்களைப் பகிர்ந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது:
உங்களது கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் பலன் கிடைக்கும் சார். இது மிகவும் கடினமான விடாமுயற்சியுள்ள ஒரு விளையாட்டு. நீங்கள் இதற்காக உங்களை அர்பணித்ததும் கடினமாக உழைத்ததுக்கும் மிகவும் பெரிய விஷயம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்க வேண்டும் சார். உங்களை நேசிக்கிறேன் சார் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.