46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகையும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியுமான சங்கீதா தான் கருவுற்றுள்ளதை அறிவித்துள்ளார்.
சங்கீதா
சங்கீதா இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

சின்ன திரை நடிகையும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியுமான சங்கீதா தான் கருவுற்றுள்ளதை அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

சின்ன திரை நடிகையான சங்கீதா, ஆனந்த ராகம் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்து மக்களிடம் பிரபலமடைந்தவர். 46வயதான இவர், 2018-ல் விஜய் தொலைக்காட்சியின் அரண்மனைக் கிளி தொடரில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.

அதில், இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டதைத் தொடர்ந்து திருமகள், ஆனந்த ராகம் போன்ற பிரபல தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

சின்ன திரையில் மட்டுமின்றி விஜய்யின் மாஸ்டர் மற்றும் அஜித் குமாரின் வலிமை படத்திலும் சங்கீதா நடித்துள்ளார்.

தனது வசீகரமான நடிப்பினால் மக்களைக் கவர்ந்த இவர், கடந்த 2023ஆம் ஆண்டு சினிமா காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்துகொண்டார். நீண்டநாள்களாக காதலித்துவந்த இவர்கள் திருமணத்துக்குப் பிறகு பலரின் கவனத்தை ஈர்த்த தம்பதிகளாக வலம்வந்தனர்.

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா இன்ஸ்டாகிராம்

இதனிடையே தாங்கள் கருவுற்றுள்ளதை சங்கீதா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சங்கீதா
சங்கீதா இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com